மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக கூட்டத்தில் "ஜெயலலிதா"
கன்னியாகுமரி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நமக்கு நாமே கூட்டத்தில் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள் அனைவரும் கையில் வைத்திருந்த செய்தித் தாளில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரமாண்ட படம் அடங்கிய விளம்பரம் இடம் பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பெயரில் பிரசாரப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கன்னியாகுமரியில் இந்தப் பிரச்சாரப் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். திமுகவினர் மத்தியில் இந்தப் பிரசார பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

12 நாட்கள் இந்த பிரசாரப் பயணம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஸ்டாலின் கலந்து கொண்ட நமக்கு நாமே கூட்டத்தில், மேடையில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் அன்றைய செய்தித்தாளை கையில் பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த திமுகவனருக்கு பயங்கர ஷாக். காரணம் செய்தித் தாளின் பின்புறம் கடைசிப் பக்கத்தில் பிரமாண்ட சைசில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் பிரசுரமாகியிருந்தது. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரது கையிலும் உள்ள பேப்பரும் இப்படி ஜெயலலிதா படத்தையே பிரமாண்டமாக காட்டியது.

இதனால், திடீரென அதைப் பார்ப்போருக்கு ஏதோ அதிமுக கூட்டமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ஜெயலலிதா வியாபித்திருந்தார்.
திமுக கூட்டத்தில் இப்படி ஜெயலலிதா திடீரென தலை காட்டியதால் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications