கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட ஜெ. வீடியோ... தினகரன் ஓட்டை அள்ள இது தான் காரணமா?
டிடிவி. தினகரனுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து மதில் மேல் பூனையாக கருத்துகள் வந்தாலும் கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட ஜெயலலிதாவின் வீடியோ ரிலீஸ் அவருக்கு அதிக வாக்குள் கிடைக்க உதவியுள்ளதா?
Recommended Video

சென்னை : ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை கடைசி நேரத்தில் வெளியிட்டு வாக்குகளை அள்ளிவிட்டாரா தினகரன். தினகரனுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிமுக வேட்பாளர் என்பதால் மக்களின் ஆதரவு இருந்தாலும், இந்த முறை அரசியல் கட்சி சாராமல் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய போதும் அதே ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்பது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக, திமுகவினரே ஷாக்காகும் அளவிற்கு வாக்கு எண்ணிக்கையின் முதல் 2 சுற்றுகள் அமைந்து விட்டன. 14 மேஜைகளில் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவில் தினகரன் சுமார் 5339 வாக்குகள் பெற்றார், அதிமுக வேட்பாளரை விட சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அவர் முன்னிலை பெற்றிருந்தார். 2வது சுற்றிலும் கூட தினகரனே முன்னிலை வகிக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது முதன்முறையாக ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காகவே ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டிருந்தார் தினகரன். அதில் ஆர்கே நகரில் 50 ஆயிரம் பேருக்கு வீடி கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இது இருந்து வருகிறது.

தினகரனின் பிரச்சாரம்
இந்த முறை இடைத்தேர்தலின் போதும் மக்கள் மத்தியில் இதனையே பிரதானமாக வைத்து தினகரன் பரப்புரை செய்தார். ஆளும் கட்சி பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் ஓட்டை எனக்கு போடுங்கள் என்று சொல்லி மக்களின் கவனத்தை ஈர்த்தார் தினகரன்.

அதிமுக பிரச்சாரத்தில் சுணக்கமா?
ஆர்கே நகரில் அதிமுகவின் பிரச்சாரம் என்பது திமுகவை விட தினகரனை தாக்கியே இருந்தது. கடைசி கட்டத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்று கேட்டு ஓ.பிஎஸ், ஈபிஎஸ் தரப்பு பிரச்சாரம் செய்தது.

அதிமுகவின் கடைசி கட்ட பிரச்னை
இதனால் திடீரென தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல்,வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பழச்சாறு குடித்த வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். ஏற்கனவே ஜெயலலிதாவின் அபிமானிகளாக இருக்கும் ஆர்கே நகர் மக்கள் மத்தியில் இந்த வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

தினகரன் வாக்கை அள்ள இது தான் காரணமா?
வீடியோவை வெளியிடக் கூடாது என்று ஆணையம் தடை போட்டாலும், வீடியோ மக்களை சென்றடைந்துவிட்டது என்பது தான் உண்மை. இதன் பிரதிபலிப்பாகவே தினகரன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications