சுவாதி கொலை சம்பவம்... முன்கூட்டியே படமான குற்றமே தண்டனை?
சென்னை: காக்கா முட்டை படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மணிகண்டன் அவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகியிருக்கும் படம் 'குற்றமே தண்டனை'.
விதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படம் செப்டம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. காக்கா முட்டை படத்திற்கு முன்பாகவே இப்படத்தை ஆரம்பித்தார் மணிகண்டன்.

ஆனால் இதை முந்திக் கொண்டு வந்துவிட்டது 'காக்கா முட்டை'. பொதுவாகவே மணிகண்டனின் சமூக அக்கறைக்கு தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவர் இயக்கியிருக்கும் 'குற்றமே தண்டனை'யும் கூட சமூகத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்களை மையமாக கொண்டது என கூறப்படுகிறது.
வேலைக்குப் போகும் இளம்பெண்ணை ஒருவன் விரட்டி விரட்டி காதலிப்பது போன்றும், நடு ரோட்டில் அந்த பெண் கொலை செய்யப்படுவது போன்றும் திரைகதை அமைக்கப்பட்டுள்ளதாம். கடைசியாக அந்த பெண்ணை கொலை செய்தது அவனா? வேறொரு ஆளா? என்பதுதான் இப்படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார்கள்.
மேலும் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சம்பவத்தை மையமாக வைத்தும் படம் தயாராகி உள்ளதாம். இதில் சுவாதி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், "சுவாதி கொலை சம்பவத்துக்குள் விடை தெரியாத பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. குற்றமே தண்டனை படத்திலும் அதுபோன்ற ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையை பார்த்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உளவியல் ரீதியான விஷயங்களை இதில் காட்சிப் படுத்தியுள்ளேன்.
ஐந்து கதாபாத்திரங்களை சுற்றி கதை நகரும். எனது படங்களில் சில உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கிறது. விதார்த், 'கிரடிட் கார்டு' பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். எனது படங்களை அதிக செலவில் எடுப்பது இல்லை. எனவே தயாரிப்பாளர்களுக்கு அவை நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத பாடல்களை படங்களில் திணிப்பதும் எனக்கு பிடிக்காது.
குற்றமே தண்டனை படத்தை பாடல்கள் இல்லாமலேயே எடுத்து இருக்கிறேன். இந்த திகில் படத்துக்கு இளையராஜா சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். ஹரிஹர நாகநாதன், முத்து, காளீஸ்வரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
எது எப்படியோ... குற்றமே தண்டனை படம் சுவாதி கொலையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications