ரஜினி அதிமுக தலைவரா.. அதெல்லாம் வாய்ப்பே இல்லை.. செல்லூர் ராஜு பொளேர்!
ரஜினிக்கு கட்சி தலைமை கிடையாது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவுக்கு தலைமையேற்க வந்தால் அதற்கு ஒருபோதும் இடம் தர மாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நேரடியாக கட்சி ஆரம்பிக்க முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் ரஜினி குறுக்கு வழியில் அதிமுகவைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவை அப்படியே ரஜினியிடம் பறித்துக் கொடுக்க மத்திய ஆளுங்கட்சி முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ரஜினியை அதிமுக தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிமுகவிற்கு ரஜினி தலைமையேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
யார் வேண்டுமாலும் அதிமுகவில் இணையலாம். அதேசமயம், தொண்டனாக இணைந்து, பின்னர் படிப்படியாக முன்னேறி வந்துதான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
நேரடியாக கட்சியின் தலைமை பொறுப்புதான் வேண்டும் என்று ரஜினி வேண்டுகோள் வைத்தால் கட்சி தலைமை அதனை ஒருபோதும் ஏற்காது என்று கூறிய செல்லூர் ராஜூ, ரஜினி மட்டுமில்லை, அது கமலாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, கட்சியில் தொண்டராக சேர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டாற்றினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இதுதான் கட்சியின் நிலைப்பாடும். எனவே கட்சியில் சேர்ந்தவுடனே தலைமை பொறுப்பு என்பது கிடைக்காது என்று உறுதிபட தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications