திடீர் திடீர் பரபரப்புகள்.. திசை திருப்பும் செயல்களா?.. எதற்கும் விஜயகாந்த் கவனமாக இருப்பது நல்லது!
சென்னை: சென்னை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும், அந்த சமயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யத் தவறிய செயல்களையும் கிட்டத்தட்ட மக்கள் மறந்து விட்டார்கள். இதைத்தான் சிலர் எதிர்பார்த்தனர்.. அதற்கேற்ப நகர்த்தப்பட்ட காய் நகர்த்தல்களும் செவ்வனே அரங்கேறி வருவதாகவும் தெரிகிறது.
சென்னையை உலுக்கிய வெள்ளம் வடிந்த கையோடு தமிழகத்தில் புதுப் புதுப் பரபரப்புகளை கச்சை கட்டிக் கொண்டு கிளம்புகின்றன. இவையெல்லாம் திசை திருப்பல் நடவடிக்கைகளாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

சென்னையை உலுக்கிய மிகப் பெரிய வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு சரிவர ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே வைக்கப்பட்டுள்ளது. அதை விட செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் காட்டப்பட்ட மெத்தனமும் சர்ச்சையாகியுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.
மக்களிடமும் கூட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு முழு்மையாக ஈடுபடவில்லையே என்ற வருத்தமும், வேதனையும் மேலோங்கியே உள்ளது.
இந்த நிலையில்தான் திடீரென சிம்பு - அனிருத் விவகாரம் பலமாக வெடித்து வெளிக் கிளம்பியது. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் செய்த அசிங்கத்தை அம்பலப்படுத்தி விட்டார் ஒருவர். அந்த அசிங்கத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் வெடித்துக் கிளம்பிய கருத்துக்கள், எதிர்க்கருத்துக்கள், பெண்கள் அமைப்பினரின் போராட்டங்கள், போலீஸ் புகார்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் அந்தப் பக்கம் அப்படியே திரும்பி விட்டது.
இந்த அசிங்கப் பாட்டை இருவரும் எப்போதோ போட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென இப்போது இது ஏன் கசிந்தது என்றுதான் தெரியவில்லை.
அடுத்து இந்த விவகாரத்தில் புதிதாக ஒரு பரபரப்புக்கு நேற்று பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி சான்றிதழ், பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் பேச ஆரம்பித்தபோது திடீரென ஒரு செய்தியாளர் குறுக்கிட்டு பீப் சாங் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது அத்தனை பேருக்குமே குழப்பம்தான். இளையராஜாவோ கோபமாகி விட்டார். வார்த்தையை விட்டு விட்டார்.
இந்த இடத்தில்தான் டோட்டல் அட்மாஸ்பியரே மாறிப் போனது. என்ன காரணத்திற்காக நேற்றையே நிகழ்ச்சி நடந்ததோ அது சுத்தமாக அடிபட்டுப் போய் விட்டது. இளையராஜா செய்தியாளரைத் திட்டி விட்டார் என்பதே தலைப்புச் செய்தியாகிப் போனது.
நேற்றைய நிகழ்வு எப்படி இருக்கிறது என்றால்.. இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அப்போது அந்த வழியாக அவர் பாட்டுக்குச் சென்ற ஒரு ஆளைப் பிடித்து, இவங்க சண்டை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்து இதை ஏய்யா என் கிட்ட கேக்குறே என்று கேட்டதை வைத்து நீ எப்படி இப்படிச் சொல்லலாம், அதெப்படி நீ கருத்து சொல்லாம போகலாம் என்று சண்டை பிடிப்பது போல உள்ளது.
மொத்தத்தில் வெள்ளம் என்ற வார்த்தையே மக்கள் மனதிலிருந்து அகல வேண்டும் என்ற திட்டத்துடன் யாரோ செயல்படுவது போலத்தான் தெரிகிறது.
எதற்கும் விஜயகாந்த் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது.. அடுத்து அவரை டார்கெட் செய்தாலும் செய்யலாம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications