சென்னை குண்டுவெடிப்பு மோடியைக் குறி வைத்து நடத்தப்பட்டதா... பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம்
சென்னை: சென்னைக் குண்டுவெடிப்பு மோடியைக் குறிவைத்து நடத்தப் பட்டிருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர். மேலும், காயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ''இந்தியாவில் வலுவான பிரதமர் வந்துவிடக்கூடாது என்பது பாகிஸ்தானின் எண்ணமாக உள்ளது.

அந்த வகையில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. தமிழகத்திற்குள் நுழைந்துள்ள ஐ.எஸ்.ஐ., உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை என்பதையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சம்பவம் காட்டுகிறது.
மேலும், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி ஆந்திரா வந்துள்ள நிலையில் சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. மோடியைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் பல இடங்களை தகர்க்க உள்ளதாக தெரிவி்த்துள்ளனர். எனவே, ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications