போயஸ் கார்டனில் ஜெயலலிதா அறையில் பாதாள அறைகளா?.. உண்மை என்ன?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதாள அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதாள அறைகள் உள்ளதாகவும் அதில் பல்வேறு ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் சசிகலா உறவினர்களை விசாரணை வளையத்தினுள் கொண்டு வரும் நடவடிக்கையாக 187 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
சசிகலா, விவேக், தினகரன் ஆகியோருக்கு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியிருந்ததாலும், அங்கு சென்று வந்ததாலும் அந்த இடம் விதிவிலக்கல்ல என கருதிய வருமான வரித் துறை நேற்று முன் தினம் இரவு திடீரென அங்கும் சோதனை நடத்தியது.

சோதனைகள்
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையில் இருந்து பென் டிரைவ்கள், இரு லேப்டாப்கள், கடிதங்கள் என ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. போயஸ் தோட்டத்தில் இருந்து ஒரு சிறிய டெம்போ அளவுக்கு ஆவணங்கள், பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

விவேக் அனுமதிக்கவில்லை
ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்த விவேக் ஜெயராமன் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த அறையில் பாதாள அறைகள் இருப்பதாக அந்த காலத்திலேயே பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டே வருமான வரித் துறையினர் சோதனை நடத்த வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏராளமான ஆவணங்கள்
அந்த பாதாள அறையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடியவர்கள் சசிகலாவும், விவேக் ஜெயராமனும். மேலும் பூங்குன்றனும் அந்த வீட்டில் தங்கியிருந்தார். மேலும் அழைக்கப்படாமலேயே விவேக் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.

அறையை ஆய்வு செய்தால் உண்மை தெரியும்
அங்கு ஜெயலலிதாவின் அறையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சாவி தாருங்கள் என்றும் கேட்டனர். அதற்கு விவேக் மறுத்துவிட்டார். எனவே ஜெயலலிதா அறையை ஆய்வு செய்தால் போதுமான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என்றும், பாதாள அறைகள் இருந்தால் நிச்சயம் அதிலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கப் பெறலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications