Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ஆண்டு தவம்; பதுங்கிய விஜய்! செக் வைத்த போயஸ் கார்டன்? Time to lead ஞாபகம் இருக்கா பிகிலு?

Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 'புதிய கீதை' படம்தான் முதன்முதலாகச் சர்ச்சையைத் தொடங்கி வைத்தது. அந்தத் தலைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் புனித நூலை அவமதிப்பதாக உள்ளதாக சர்ச்சை வெடித்தது.

அப்போது எல்லாம் விஜய்க்கு அரசியல் கனவுகள் இல்லை. ஆகவே, அவர் அடக்கமாக இருந்தார். அதன்பின்னர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது 'தலைவா'தான்.

Is this the meaning of Vijays words Time to lead?

அந்தப் படத்தில் போஸ்டரில் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து விஜய் கையசைக்கும் போஸ்டர் ஆளும் கட்சியைச் சீண்டியது. கூடவே Time to lead எனப் போட்டிருந்த வாசகத்தால் போயஸ் கார்டன் கடுப்பானது.

அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது கோபத்தைச் சம்பாதித்தது 'தலைவா'. அந்த நேரத்தில் விஜய்க்குப் பெரிய அளவில் ரசிகர் பலம் இருந்தது. ஆனால், அவர் அமைதியாக அந்தப் பிரச்சினையை டீல் செய்தார்.

அந்த இசை விழாவில் பெரிய அளவில் இதற்கு எல்லாம் பதில் கொடுப்பார் என எதிர்பார்த்த போது விஜய்யிடம் மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது.

Is this the meaning of Vijays words Time to lead?

அதேபோல், போயஸ் கார்டன் வட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ.சி போஸ்டர் 'அப்பா' என்று ஒட்டப்பட்டது. அதுவும் 'அம்மா'வுக்குப் பதில் 'அப்பா'வா எனக் கடுப்பானது அதிமுக வட்டாரம்.அதுவும் சில பின் விளைவுகளை ஏற்படுத்தியது.

'தலைவா' படப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டுத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என விஜய் வெளியிட்ட வீடியோ அன்று பலரால் விமர்சிக்கப்பட்டது. படங்களில் பஞ்ச் டயலாக் அடிக்கலாம் ரியலில் உங்கள் அதிகாரம் அவ்வளவுதான் என்று அரசியல் கட்சியினர் விஜய்யை விமர்சித்தனர்.

Is this the meaning of Vijays words Time to lead?

அந்தளவுக்கு விஜய் அந்த வீடியோவில் கையைக் கட்டிக்கொண்டு அடக்கம் காட்டி இருந்தார். அதன் பின்னால் ஒவ்வொரு பிரச்சினை வரும்போது 'உசுப்பேத்துறவங்களிடம் உம் என்றும் கடுப்பேத்தறங்களிடம் கம் என்று இருக்க வேண்டும்' என்று அவரது ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னார்.

உண்மையில் அவரை உசுப்பேற்றியவர் இன்று இல்லை. அன்று அவர் ரிவஞ்ச் எடுக்கவில்லை. இன்று பெரிய அளவில் அரசியல் தலைமை இல்லை என்பதால் தான் உள்ளே நுழைகிறார் விஜய்.

Is this the meaning of Vijays words Time to lead?

அதற்கு ஊழல், மதவாதம் என்று எல்லாம் பேசுகிறார். விஜய் அரசியலுக்கு வர அழுத்தம் தந்த படம் 'தலைவா'தான். சரியாக பத்து ஆண்டுகளாக இதற்காக அவர் காத்திருந்தார் என்பதுதான் உண்மை. அவரை நேரில் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை நன்றாகவே தெரியும்.

'தலைவா' நேரத்தில் நடந்த சில விசயங்களை இயக்குநர் ஏ எல் விஜய் இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

Is this the meaning of Vijays words Time to lead?

"விஜய் கட்சி ஆரம்பித்துள்ள செய்தியைப் படித்தேன். அவருக்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் அரசியலுக்கு வருகிறார். அவர் அனைவர் மீதும் அக்கறையாக இருப்பார்.

'தலைவா' படப்பிடிப்பில் ஒரு நடனக் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த நடனக் காட்சி சிறப்பாக அமைந்தது. படத்திலும் அது பேசப்பட்டது. அந்தப் படப்பிடிப்பின் போது அனைத்து நடனக் கலைஞர்களையும் அழைத்து ஒரு தொகையைப் பரிசாகக் கொடுத்தார்.

Is this the meaning of Vijays words Time to lead?

'தலைவா' படப்பிடிப்பு மும்பை தாராவி பக்கத்தில் எடுத்தோம். அப்போது ஒரு பாலமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அது மிகச் சின்ன பாலம். அதில் 10 ஆயிரம் பேர் நின்றிருந்தார்கள். காவல்துறையினரே வந்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். விஜய்யை உடனடியாக இங்கிருந்து கிளம்பச் சொல்லுங்கள் என்று.

தமிழ்நாட்டில் அவருக்குக் கூட்டம் கூடுவது வாடிக்கை. அதில் ஆச்சரியமே இல்லை. ஆனால், மும்பையில் அப்படி நடந்தது. அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உள்ளன.

எப்போதும் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டால் அலட்சியமாக இருக்கமாட்டார். அதற்கு ஏதேனும் வகையில் ஒரு அங்கீகாரத்தை அளிப்பார். நேரடியாகப் போய் கைகுலுக்குவார். அல்லது பார்த்து பை சொல்லுவார். இப்படி எந்தவகையிலாவது அவர் ஒரு மதிப்பளிப்பார். அது அவரது சுபாவம்.

Is this the meaning of Vijays words Time to lead?

'தலைவா' படத்தில்Time to lead vijay என்ற வாசகம் பெரிய சர்ச்சை ஆனது. அதுபற்றி பதிலளித்த ஏ.எல்.விஜய், "என் சினிமா வாழ்க்கையில் 'தலைவா' மிக முக்கியமான படம். அந்த வாசகத்தை இப்போது ரசிகர்கள் குறிப்பிட்டுப் பேசுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+