விஜய் தமிழரா, தெலுங்கரா.. எங்கள் சாதிக்காரர்.. சமூக வலைதளங்களில் நடக்கும் சூடான பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவருமான விஜய் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து முதல்வராக பதவியேற்று இருப்பது இப்போது தான் முதல் முறை. சரியாக 49 வருடங்கள் கழித்து நடந்துள்ளது. இந்த சூழலில் தவெகவினர் பலர் சந்தோஷமாக பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் சிலர் விஜய் எங்கள் சாதியை சேர்ந்தவர் என்று மாறி மாறி கொண்டாடுகிறார்கள்.. சிலர் அவர் தமிழர் என்றும், சிலர் தெலுங்கர் என்றும் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் 18வது முதல்வராக விஜய் இன்று பதவியேற்றார். அவர் 33 ஆண்டுகளாக நடிகராக இருந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் மாறி உள்ளார். இன்று சென்னை சென்டரலில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு நடந்தது. இந்த விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் உள்பட பலர்பங்கேற்றனர். நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததால் அவரை ஓடிப்போய் படப்பிடிப்பதில் ஊடகவியலாளர்கள் பலர் போட்டி போட்டனர். ஆச்சரியத்துடன் புகைப்படங்களையும் பகிர்ந்தார்கள்.

Is Vijay a Tamilian or a Telugu heated debate about CM Vijay caste on social media

மறுபக்கம் விஜய் தமிழர் என்றும், சிலர் தெலுங்கர் என்றும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கிறிஸ்தவர் என்றும், அம்மா ஷோபா வெள்ளாளர் முதலியார் என்றும் கூறினார்கள்.. ஷோபாவின் சாதி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ இருக்கிறது. .

அதில் தான் கிறிஸ்தவர் என்றும் அங்கு வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்ததாகவும், ஷோபா முதலியார் என்றும் கூறினார். அந்த வீடியாவை எடுத்து வைத்துக் கொண்டு தான் விவாதத்தையே நடத்துகிறார்கள். இன்னும் சிலர் விஜய் தமிழர் என்றும், சிலர் தெலுங்கர் என்றும் விவாதம் நடத்துகிறார்கள். இந்த விவாதம் எக்ஸ்தளத்தில் அதிகமாக இருப்பதை காண முடிந்தது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் பூர்வீக மாவட்டம் ராமநாதபுரம் முத்துப்பேட்டை கிராம் ஆகும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த ரெகுநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். எஸ்.ஏ.சந்திரசேகரின் தாயார் முத்துப்பேட்டை மற்றும் சத்திரக்குடி அருகே காமன்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியையாக வேலை பார்த்தவர். அதேபோல் எஸ் ஏ சந்திரசேகரின் தந்தை சேனாதிபதி தங்கச்சிமடம், சத்திரக்குடி ஆகிய ஊர்களில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணிபுரிந்தவர். சந்திரசேகர் ராமநாதபுரத்தில் படித்து வளர்ந்தவர். அதன்பின் சென்னைக்கு வந்து சினிமா டைரக்டராக வெற்றி பெற்றார். சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+