ஐசர்வேலன் மகள் தயாரித்த ‘அதிமுக புகழ் பாடும் டிஜிட்டல் பிரச்சார வேன்...’
சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பயணம் மேற்கொள்ள வசதியாக நவீன டிஜிட்டல் பிரச்சார வேன் ஒன்றை தயார் செய்துள்ளார் மயிலாப்பூர் அதிமுக நிர்வாகியான டாக்டர் அழகு தமிழ்செல்வி.
லோக்சபா தேர்தலுக்காக கட்சிகள் கொளுத்தும் வெயிலிலும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வசதியாக நவீன டிஜிட்டல் பிரசார வேன் ஒன்று கிடைத்துள்ளது. மறைந்த அ.தி.மு.க. துணை அமைச்சரும், சிரிப்பு நடிகருமான ஐசரிவேலனின் இளைய மகள் டாக்டர் அழகு தமிழ் செல்வி ரூ.25 லட்சம் செலவில் இந்த பிரசார வேனை தயார் செய்துள்ளார்.
இந்தப் பிரச்சார வேனின் சிறப்பம்சம் அதில் அமையப் பெற்றுள்ள காணொலி திரை வசதி தான். வேனில் முன்புறம் 15 அடி உயரம், 15 அடி அகலத்தில் எல்.இ.டி. மானிட்டர் அமையப் பெற்றுள்ளது.
அதன் மூலம் பேச்சாளர் வாகனத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது காணொலி திரையில் ‘பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் தொழில் நுட்பம்' மூலம் வீடியோ படங்கள் ஓடும். அதாவது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பேச்சாளர் பட்டியலிடும் போது முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள் வீடியோ படமாக திரையில் ஒளிபரப்பாகும்.
இது போல் எதிர் கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசும் போது, அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் ஓடும். நவீன டெக்னாலஜியில் இந்த பிரசார வேனை வடிவமைத்து உள்ளனர்.
இந்தப்பிரசார வேனை வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். வேட்பாளர் ஜெயவர்தன், மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, டாக்டர் அழகு தமிழ்செல்வி, டாக்டர் அருள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த வேனில் டாக்டர் அழகு தமிழ்செல்வி தென் சென்னை தொகுதியில் தெரு தெருவாக சென்று பிரசாரம் செய்தார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications