ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
வேலூர்: குமரியில் இருந்து பெங்களூர் சென்ற ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை அருகே தடம்புரண்டதால் அந்த வழியாக செல்லும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குமரியில் இருந்து பெங்களூர் சென்ற ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Cancellation of Trains4m Chennai & Bangalore on 05.02.2016 due to Train No 16525. @swrbengaluru @SWRRLY @DrmChennai pic.twitter.com/T66hp0ITP8
— @GMSouthernrailway (@GMSRailway) February 5, 2016
மேலும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால் பாக் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ராஜ்கோட் செல்லும் ரயில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications