Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணில் பாய தயார் நிலையில் ஆதித்யா எல் 1.. சூரியனார் கோவிலில் சிறப்பு அர்ச்சனையுடன் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளைய தினம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று கும்பகோணம் சூரியனார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவகிரகங்களின் தலைவன் சூரியன். ஜோதிடத்தில் சூரியன் தந்தைக்காரகன். சூரிய வழிபாடு காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது. உலகிற்கே ஒளி கொடுக்கும் கடவுள் சூரியன். இந்தியாவில் சூரிய பகவானுக்கு என தனித்துவமாக ஒரு சில கோயில்களே உள்ளது. ஒடிசா மாநிலம் கோனார்க்கில் உள்ள சூரிய கோயில் நாடு முழுவதும் பிரிசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. இங்கு சூரியனுக்கு உருவ வழிபாடு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சூரிய பகவானுக்கு உருவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டிலும் சிவ ஆலயங்களில் சூரிய பகவானுக்கென தனி சந்நதிகள் உள்ளன.

ISRO launch Aditya L1 on 2nd sep special prayer on Kumbakonam Sooriyanar temple

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சூரிய நாராயணனர் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. 1800 வருடங்கள் பழமைவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது, கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

இக்கோவிலில் பிரதான கடவுளாக சூரியநாராயணன் தன்னுடைய மனைவிகள் பிரத்யுஷா தேவி, உஷா தேவி உடன் ரதத்தில் இருப்பது போல் காட்சியளிக்கின்றார். எதிரில் குரு பகவான் கை கூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. கண் ஒளி கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்கிற ஆதித்யா எல்1 விண்கலத்தின் பயணம் வெற்றியடைய வேண்டி சூரியனார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட்டு வரும் நிலையில், அடுத்தபடியாக சூரியனுக்கு இந்த ஆதித்யா விண்கலத்தை அனுப்புகிறது. நாடே இந்த நிகழ்வுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆதித்யா எல்1 திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல்தான். காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான்.

சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி. இந்நிலையில், இந்த சூரியனார் ஆலயத்தில் ஆதித்யா விண்கலம் வெற்றி அடைய பூஜைகளும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சூரிய பகவானுக்கு என்று பரிதி, பாஸ்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கள், இருள்வலி, சவிதா, சூரன், ஏல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா என பல பேர்கள் உள்ளன. அதில் ஒரு பெயராக இந்த ஆதித்யா பெயரையே ராக்கெட்டிற்கு வைத்திருப்பதால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் பாய்கின்றன ஆதித்யா எல்1 ராக்கெட் நிச்சயம் பிரகாசமாக இருக்கும் என்றும் கோயில் அர்ச்சகர்கள் கூறியுள்ளனர்.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பும் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும், திங்களூர் சந்திரன் பரிகார ஸ்தலத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதே போல நாளைய தினம் விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 வெற்றிக்காக சூரியனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+