வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம்: இஸ்ரோ
நாகர்கோவில்: சென்னையில் மழை வெள்ளத்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டதற்கு அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என இஸ்ரோ விஞ்ஞானியும், தும்பா விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனருமான சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் மிகப் பெரிய விண் வெளி மையமாக கருதப்படும் திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன். இவர் நாகர்கோயில் இருளப்பபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எங்கே மழை பெய்யும், காற்றழுத்த தாழ்வு நிலை எப்போது சென்னையை கடக்கும் என்பது போன்ற விவரங்கள் செயற்கைக்கோள் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசு இதனை கவனத்துடன் கையாளவில்லை. மழை பெய்வதற்கு முன்னரே ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளை காலி செய்து மக்களை அப்புறப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications