ஒரு பக்கம் திமுக.. இன்னொரு பக்கம் ரசிகர்கள்.. இப்போது சேதுபதி.. விஜய்க்கு பெருகும் மாஸ் ஆதரவு!
நடிகர் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும், மத மாற்ற வதந்திகள் குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி சொல்லி இருக்கும் நச் கருத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும், மத மாற்ற வதந்திகள் குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி சொல்லி இருக்கும் நச் கருத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு இதன் மூலம் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த வாரம் தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.

ரெய்டு எப்படி
இந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதற்கு பின் பெரிய மத மாற்ற குழு இருக்கிறது. பலர் இதில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் என்று பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதன்படி ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த ரெஜினா என்று பெண்தான் இந்த மத மாற்றத்திற்கு காரணம். அவர் மதம் மாற்றும் குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

முன்னணி நடிகர்
இவர் முன்னணி நடிகர்களை மதம் மாற வைத்துவிட்டார். நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோரை கிறிஸ்துவ மதத்துக்கு அவர் மாற்றிவிட்டார். இதற்கான விழா கூட சமீபத்தில் வடபழனியில் நடந்தது என்று பொய்யான தகவல்கள் பரவி வருகிறது,.இதற்கு பலகோடி செலவு செய்யப்படுகிறது. இந்த பணம் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டில் இருந்து வருகிறது.

பணம் எப்படி
இந்த பணம்தான் அன்புச்செழியனுக்கு கிடைத்தது. அவர் பிகில் படத்தை தயாரித்தார். இதை கண்டுபிடித்த வருமான வரித்துறை அவரை வீட்டில் சோதனை செய்தது. விஜய் வீட்டிலும் இந்த மத மாற்ற பணம் காரணமாகவே சோதனை நடந்தது என்று அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. முழுக்க முழுக்க கற்பனை கலந்து எழுதப்பட்ட மிக மோசமான வதந்தி ஆகும் இது.

நடிகர் விஜய் சேதுபதி
இதற்குத்தான் நடிகர் விஜய்சேதுபதி தற்போது காட்டமாக பதில் அளித்துள்ளார். ‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி இப்படி அதிரடியாக பேசியது பெரிய வைரலாகி உள்ளது. இந்த டிவிட் மூலம் மதம் மாற்றம் குறித்த பொய்யான செய்திக்கு விஜய் சேதுபதி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். ஏன் இப்படி பொய்யை சொல்லிக் கொண்டு சுற்றுகிறீர்கள் என்று பலரை விஜய் சேதுபதியை நேரடியாக சீண்டி உள்ளார்.

இன்னொரு பக்கம்
இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி நேரடியாக விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த மொத்த பார்வேர்ட் மெசேஜும் விஜய் வீட்டில் நடந்த ரெய்டை அடிப்படையாக கொண்டு சித்தரிக்கப்பட்டது. அதனால் விஜய் வீட்டில் நடந்த ரெய்டையும் விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்துள்ளார். இதன் மூலம் விஜய்க்கு தற்போது ரெய்டு விவகாரத்தில் விஜய் சேதுபதியின் சப்போர்ட் கிடைத்துள்ளது.

வருமானம்
தற்போது வருமான வரித்துறை ரெய்டு விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.முன்னதாக விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின் தமிழக காங்கிரஸ், விஜய்க்கு நேரடியாக ஆதரவு அளித்தது. . எதிர்க்கட்சிகள் இப்போதே விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டது. அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். திமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் எப்படி
தயாநிதி மாறன் லோக்சபாவிலேயே விஜய்க்கு ஆதரவாக பேசினார். தற்போது முன்னணி நடிகர்கள் பலர் இதேபோல் விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். முன்னதாக சாந்தனு போன்ற நடிகர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். தற்போது புதிய திருப்பமாக நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆதரவு அதிகம்
நடிகர் விஜய்யும் விஜய் சேதுபதியும் தற்போது ஒன்றாக நடித்து வருகிறார்கள். மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.












Click it and Unblock the Notifications