For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம மோகன ராவை கைது செய்ய திட்டம்? வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆலோசனை

ராம மோகன ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஐடி அதிகாரிகள் சென்னையில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்த நிலையில், அவர் உடல் நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் 20 கம்பெனி துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

IT department officials meet at Chennai

இதனிடையே ராம மோகன ராவுக்கு எதிரான ரெய்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கடந்த 17ம் தேதியே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வருமான வரித்துறை அனுமதி பெற்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. ரெய்டில் பல ஆதாரங்கள் கிடைத்ததால் ராம மோகன ராவை இன்று கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டிருந்ததாம். இதை தனக்கு வேண்டிய அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்ட ராம மோகன ராவ், போரூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ராம மோகன ராவுக்கு எதிராக அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இன்றைய வருமான வரி அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

English summary
IT department officials meet at Chennai as they prepare the next plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X