போயஸுடன் தொடர்புடைய சேகர் ரெட்டியுடன் "லிங்க்": தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் ஐடி ரெய்டு!
தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பல மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டராக இருப்பவர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கின. இவற்றில் பெரும்பகுதி 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 5.13 மணி முதல் சோதனை நடத்தினர்.

சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீட்டிலும் பல மணிநேரம் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர். இச்சோதனை நடந்து கொண்டிருந்த போதே சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலுவை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications