ராமமோகன ராவ் விரைவில் கைது.. நாளை முதல் முழு வேகம் எடுக்கிறது வருமான வரித்துறை ரெய்டுகள்!
வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து ராமமோகன ராவ் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படவுள்ளனவாம்.
சென்னை: ராமமோகன ராவைக் கைது செய்வது, அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்துவது என பல்வேறு திட்டங்களுடன் நாளை முதல் படு தீவிரமாக களம் இறங்க தயாராகி வருகிறது வருமானவரித்துறை என்று தகவல்கள் கூறுகின்றன.
நாளை முதல் இந்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் இருக்கும் என்றும், இதற்காகவே ஹைதராபாத்திலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம மோகன ராவ் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளனர்.

டைரிக் குறிப்பு
இதில் ஒரு டைரிதான் முக்கியத் துருப்புச் சீட்டாக மாறியுள்ளது. அதில் தன்னுடன் தொடர்புடைய அனைவர் குறித்தும் எழுதி வைத்துள்ளாராம் ராவ். அதில் பலர் அரசியல் பிரபலங்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஒன்றில் பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாம்.

விரிவடையும் விசாரணை
மேலும் சில பென் டிரைவ்களும் சிக்கியுள்ளனவாம். அதிலிருந்து பல்வேறு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளனவாம். இந்தத் தகவல்களை கோர்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை முதல் பரபரப்பு ரெய்டுகள்
இதன் அடிப்படையில் நாளை முதல் நடவடிக்கைகளை முடுக்க விடவுள்ளதாம் வருமான வரித்துறை. நாளை முதல் ரெய்டுகள் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஹைதராபாத்திலிருந்து 60 பேர் கொண்ட குழு ஏற்கனவே சென்னைக்கு வந்து விட்டது.

பிரித்து மேயப் போகிறார்கள்
இந்தக் குழுவினருடன், ஏற்கனவே உள்ள பல்வேறு குழுக்களும் இணைந்து நாளை முதல் பிரிந்து பல்வேறு ரெய்டுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. இந்த ரெய்டுகளில் சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு சென்னையில் நிலவி வருகிறது. இருப்பினும் இப்போதைக்கு அரசியல் பிரமுகர்கள் மீது ரெய்டு வருமா என்று தெரியவில்லை. மாறாக அதிகாரிகள் சிலர் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்மோகன ராவ் கைது
ரெய்டு நடவடிக்கையுடன் ராமமோகன ராவ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யவும் நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் புத்தாண்டு பிறப்பதற்குள் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications