'ஆட்டோ சங்கர்' பாணியில் அதிமுக ஒ.செ வீட்டில் பணமூட்டை புதைப்பு-'நத்தம்' டைரி குறிப்புகளில் 'திடுக்'
சென்னை: அதிமுக ஒன்றிய செயலர் ஒருவரது வீட்டில் பண மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய டைரி ஒன்றில் எழுதப்பட்டிருந்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நத்தம் குடும்பத்துக்கு சொந்தம்
இதனடிப்படையில் நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத், துரைசாமி மகன் வெற்றி ஆகியோரிடம் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ5 கோடி பணம் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்துக்குரியது என கண்டுபிடிக்கப்பட்டது.

நிலக்கரி வயல்கள் குறித்தும்...
தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் வருமானத்துக்கு அதிகமான சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நத்தம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்தோனேசிய நிறுவனங்கள், நிலக்கரி வயல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பணம் புதைப்பு
இதனிடையே நத்தம் விஸ்வநாதனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், அதிமுக ஒன்றிய செயலர் ஒருவர் வீட்டில் பண மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளதாம்.. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோ சங்கர் பாணியில்...
அதுவும் சென்னையில் 1980களில் பெண்களை கொலை செய்து தமது வீட்டு சுவரில் புதைத்து வைத்த ஆட்டோ சங்கர் பாணியில் பண மூட்டைகளை பாதுகாப்பாக அந்த ஒன்றிய செயலர் வீட்டுச் சுவரில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும் வருமான வரித்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த ஒன்றிய செயலர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? அல்லது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications