விஜயபாஸ்கர் அப்பா வீட்டில் ஐடி ரெய்டு.. 2 பெட்டிகளில் சிக்கிய சொத்து ஆவணங்கள்.. விசாரணைக்கு சம்மன்
தமிழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி வீட்டில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்க வருமானவரித் துறையினர் அவரது தந்தைக்கு சம்மன்
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையின் விட்டில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை மற்றும் இலுப்பூரில் உள்ள வீடுகளில் இன்று விடியற்காலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

2 பெட்டி ஆவணங்கள்
புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூர் உள்ள விஜயபாஸ்கரின் பெற்றோர் வசித்த வீட்டில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையில் 2 பெட்டிகள் நிறைய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சம்மன்
இது தொடர்பாகவும், கைப்பற்றப்பட்ட மற்ற ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் வருமானவரித் துறையினர் அமைச்சரின் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். திருச்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் இன்று வர வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

சொத்து விவரங்கள்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி, சொத்து பற்றிய விவரங்கள், அது எப்போது வாங்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை கேட்டதாகவும், அதெல்லாம் மிகப் பழைய சொத்துக்கள் அதுபற்றிய தேதிகள் எதுவும் தனக்கு நினைவில்லை என்று கூறியதாகவும் கூறியுள்ளார்.

ரகசியம் அம்பலம்
இந்த விசாரணையின் போது, விஜயபாஸ்கர் வாங்கிய சொத்துகள் மற்றும் தந்தை பெயரில் பதியப்பட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த பல தகவல் அம்பலமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications