For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது- சிஎஸ்கே வீரர்கள்,ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணியலாம்: ரஜினிகாந்த்

காவிரி போராட்டத்தை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை வீரர்கள் காவிரி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிய ரஜினி வேண்டுகோள்

    சென்னை: காவிரி போராட்டத்தை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்காக ஐபிஎல் போட்டியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    It is better to stop IPL games If we need it says, Rajini on Cauvery protest

    ஐபிஎல் போட்டி காவிரி போராட்டத்தை நீர்த்து போக செய்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி போராட்டத்தை முன்னிட்டு ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அவர் தனது பேட்டியில் ''ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது. அப்போதுதான் போராட்டம் தடைபடாமல் நடக்கும். போட்டியை நிறுத்த முடியாது என்றாலும் வீரர்கள் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.'' என்றுள்ளார்.

    மேலும் ''ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜுடன் ஆட வேண்டும். சென்னை மைதானத்தில் நடக்கும் போட்டியில் கருப்பு பேட்ஜுடன் ஆடலாம். ரசிகர்கள் கருப்பு கொடியுடன் களத்திற்கு செல்லலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்'' என்றுள்ளார்.

    English summary
    We can stop IPL games If we need it says, Rajini on Cauvery Management protest issue. He says that CSK players should support Tamilnadu people on Cauvery issue by wearing black badge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X