ரஜினி பாஜகவில் சேர மாட்டார், பாஜக தான் ரஜினியில் சேர வேண்டும்: ட்வீட் கலாட்டா
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய மாட்டார் பாஜக தான் ரஜினியில் சேர வேண்டும் என்று ட்வீட்கள் செய்யப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த கேள்விக்கு அவர் பல முறை பதில் அளித்தும் அதன் அர்த்தம் தான் யாருக்கும் புரியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் பாஜக ரஜினியை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு வர பிரயத்தயனம் செய்கிறது. அவரும் வர மாட்டேன் என்பதை ஜாடை மாடையாக கூறினாலும் முயற்சி செய்தால் நடக்காதது ஒன்றும் இல்லை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருப்பதாவது,
ரஜினிகாந்த் பாஜகவில் இணைகிறார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அது இலக்கண பிழையாகும். பாஜக தான் ரஜினியில் சேர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
There is no question of Rajnikanth joining BJP. It would be grammatically wrong. BJP, can, of course, join Rajini
— Madhavan Narayanan (@madversity) November 20, 2014 அந்த ஆளுக்கு குசும்பை பாரு என்று நினைக்க வேண்டாம். ரஜினி ட்விட்டரில் சேர்ந்த நாள் நினைவில் உள்ளதா. அன்று டிவியில் ஓடிய பிளாஷில் எல்லாம் ட்விட்டர் ரஜினியில் சேர்ந்துவிட்டது என்று தானே தெரிவித்தார்கள். ரஜினி என்று வந்தால் இந்த உல்டா மேட்டும் கூடவே வரும்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications