For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா அரவக்குறிச்சியில் நாம் இல்லையே என மக்கள் புலம்பல், எதற்கு தெரியுமா?: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஆஹா அரவக்குறிச்சியில் நாம் இல்லையே என கரூர் மாவட்டத்தின் பிற தொகுதி மக்கள் புலம்புவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பணமழை

மாநிலம் முழுக்க பணமழை, பரிசு மழை பொழிகிறது: தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்க்கிறது - வாழ்க பணநாயகம்!

ஓட்டு

ஓட்டுக்கு மூட்டை நிறைய பணம் கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை கொள்ளை அடிப்பார்களா? சிந்திப்பீர். மாம்பழத்திற்கு வாக்களிப்பீர்!

அரவக்குறிச்சி

கரன்சிகுறிச்சியானது அரவக்குறிச்சி... ஆஹா அரவக்குறிச்சியில் நாம் இல்லையே என கரூர் மாவட்டத்தின் பிற தொகுதி மக்கள் புலம்பல்!

அதிமுக

அதிமுக சார்பில் ஆரத்திக்கே ஆயிரம் ரூபாய். ஓட்டுக்கு ரூ.5000. குடும்பத்துடன் மொத்தமாக வாக்களித்தால் கூடுதல் சலுகைகள்!

திமுக

அரவக்குறிச்சியில் அள்ளிவிடப்படும் பணம். ஒரு ஓட்டுக்கு ரூ.5000. குடும்பத்தில் 5 பேர் இருந்தால் இரு சக்கர ஊர்தி - இது திமுக தரும் லஞ்சம்.

English summary
PMK founder Dr. Ramadoss tweeted that it is raining money in Aravakkurichi ahead of TN assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X