பண விநியோகம்... அறந்தாங்கி அதிமுக வேட்பாளரின் தம்பி வீட்டில் "ஐடி" ரெய்டு!
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெத்தினசபாபதியின் தம்பி மணமேல்குடி கார்த்திகேயனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
அறந்தாங்கி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் அதிமுகவின் ரெத்தின சபாபதி. இவரது தம்பி கார்த்திகேயன். இவர் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமானவர். ஏற்கனவே மணல் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே போய் வெளியே வந்தவர்.

இந்த நிலையில் தொகுதியில் பணத்தை அதிமுக தரப்பு வாரியிறைத்து வருகிறது. இதுதொடர்பாக திருநாவுக்கரசர் தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித்துறைக்கும் புகார் அளித்தார். இதன் பேரில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று மாலை கார்த்திகேயனின் பண்ணைவீடான பாளையப்பட்டு கிராமத்து வீட்டிலும், அவரது உதவியாளர் மணமேல்குடி பழனி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரி பால் ஜவகர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் என்ன சிக்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சமீபத்தில்தான் கரூரில் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவரான அன்புநாதன் கிட்டங்கியில் பல கோடி அளவுக்கு பணம் சிக்கியது என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications