கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 10 மணியில் இருந்து அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜாராமல் இருந்தார். இதனால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னையிலிருக்கும் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் நேற்றுதான் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications