போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டுக்கு சீல்... ஐ.டி. அதிரடி !
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்ந்து நடக்கிறது. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications