ஜெ. சிகிச்சை பெற்ற சி.டியை பல இடங்களில் தேடிய வருமான வரித்துறை அதிகாரிகள்: திவாகரன் 'திடுக்'
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சி.டியை வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் தேடியதாக திவாகரன் கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டி.யை பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடியுள்ளதாக சசிகலாவின் சகோதரரர் திவாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திவாகரன் கூறியதாவது:
ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநிலங்களில் இருந்துதான் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அவர்களை பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறோம்.

எங்கள் வீட்டில் சி.டி. எதையும் அதிகாரிகள் கேட்கவில்லை. ஆனால் பல இடங்களில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சி.டியை கேட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டியை விசாரணை கமிஷனில் கொடுப்போம் என தினகரன் கூறியிருந்தார். இதனடிப்படையில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் ஆய்வு நடத்துகிறார். அனேகமாக ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தமிழிசையை வேட்பாளராக்கி அவரையே முதல்வராகவும் ஆக்கிவிடுவார்கள்.
அடுத்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக பக்கம் போய்விடுவார்கள். இவ்வாறு திவாகரன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications