For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்டுக்கு எதிராக களத்தில் குதிக்கும் ஐடி பெண் ஊழியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: நீட்டுக்கு எதிராகவும், தமிழகத்தின் செல்ல மகள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிப் பணியாற்றும் பெண் ஊழியர்கள் நாளை போராட்டத்தில் குதிக்கின்றனர்.

அனிதாவின் மரணம் தமிழக மக்களை மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களை உலுக்கி விட்டது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டும், நீட்டை தூக்கி் போடக் கோரியும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

IT Professionals to hold Candle Light Vigil for Anitha

இந்த நிலையில் ஐடி பெண் ஊழியர்கள் சார்பில் நாளை போராட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலவேறு ஐடி நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் முதல் கேட்டில் இந்த போராட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி இப்போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 09487485266

English summary
IT Professionals have decided to hold a Candle Light Vigil for Anitha tomorrow at 5 PM in Shollinganallur, Chennai. This has been organized by IT Women Employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X