போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு
சென்னை தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை: சேகர் ரெட்டி போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர், ஆளும் கட்சி அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உறுப்பினர். தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை எடுத்துச் செய்வதில் முன்னணியில் இருப்பவர். சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட சென்னையில் 8 இடங்களில் நேற்று காலை சோதனை நடைபெற்றது.
தியாகராயர் நகர் விஜயராகவா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு, அபிபுல்லா சாலையில் உள்ள சேகர் ரெட்டியின் ஜேஎஸ்ஆர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடந்த சோதனையில் ரூ.10 கோடி அளவிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரூ.170 கோடி ரொக்கமும், 130கிலோ தங்கமும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.70 கோடி புதிய ரூ.2000 நோட்டுகளாகும். இந்த அளவுக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் இருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் தொகை சிக்கியதால் பணத்தை எண்ண வங்கிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சேகர் ரெட்டியின் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இதே வேலையில் சேகர் ரெட்டியின் உறவினர்கள் சீனிவாச ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டிலும் பல கோடி பணம் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வீடுகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் லாரி நிறைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
#UPDATE Rs 100 crore in cash and 100 kgs of gold seized in the raid by IT Dept from 8 locations in Chennai: Sources pic.twitter.com/aRSmWQuuW0
— ANI (@ANI_news) December 9, 2016
சேகர் ரெட்டியின் சென்னை வீடு மட்டுமல்லாது,வேலூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.எனவே இன்று கைப்பற்றப்படும் தொகையின் மதிப்பு இன்னும் பல கோடிகளைத் தொடும் என கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications