துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு… மருந்து கம்பனிகளுடனான முறைகேடுகள் அம்பலம்?
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீட்டில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு தொடர்கிறது. இதில் பல்வேறு மருந்து கம்பனிகளுடன் முறைகேடுகளில் ஈடுபட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக்
சென்னை: எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருது வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரிச் சோதனை தொடரந்து நடைபெற்று வருகிறது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகள் அலுவலகங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலையுடன் ரெய்டு முடிந்த நிலையில், கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

அதிரடி சோதனை
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கீதாலட்சுமி வீட்டில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மருத்துவக் கல்லூரி தொடர்பாக பல மோசடிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறவினர் வீடுகளில்..
அதே போன்று கீதாலட்சுமிக்கு சொந்தமான மற்றொரு வீடு போரூரில் இருப்பதால் அங்கும் ரெய்டு நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

மருந்து கம்பனி முறைகேடு
இந்த ரெய்டில் கீதாலட்சுமி சுகாதாரத்துறை சேவை இயக்குநராக இருந்த போது பல்வேறு முறைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மருந்து கொள்முதல் செய்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். செவன்ஸ்டார் டிரேடிங், சண்முகா பாலிமர், உப்கார் டிரேடிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிக்குவார்கள்?
இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் நடத்திக் கொண்டிருக்கும் சோதனையில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் கீதாலட்சுமி மட்டுமல்லாமல் சுகாதாரத் துறையில் இருக்கக் கூடிய மற்ற அதிகாரிகளும் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications