For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தை பிரித்து மேயும் அதிகாரிகள்.... இன்றும் தொடரும் ரெய்டு

ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் இன்று 3-ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் 3-ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித் துறையினரின் ரெய்டு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் 3-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கினர்.

IT raid continuing for 3 rd day in Jaya TV

மொத்தம் 190 இடங்களில் இந்த சோதனை தொடங்கிய நிலையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் முடிவடைந்துவிட்டது. 3-ஆவது நாளாக இன்று கொடநாடு எஸ்டேட்டில் ரெய்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அங்குள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் ரூ.16 கோடி கருப்பு பணம் வெள்ளையாக்கிய விவகாரத்தில் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அதேபோல் விவேக் ஜெயராமன் சிஇஓவாக உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் நமது எம்ஜிஆர் அலுவலகங்களிலும் 3-ஆவது நாளாக அதிகாரிகள் ஜல்லடை போட்டு முறைகேடுகளை தேடி வருகின்றனர்.

சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. மொத்தம் 135 இடங்களில் ரெய்டு தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
IT sleuths continuing their raids in Jaya TV office , Namadhu MGR , Poes Garden and Kodanad Estate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X