தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தினர் வீடுகளில் இரண்டாவது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு
Recommended Video

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள பிரபல தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மட்டுமின்றி சமயபுரம், மாமல்லபுரம், சென்னை என பல இடங்களிலும் கல்வி நிறுவனங்கள் இந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர்.
கல்விக்குழுமங்கள் மட்டுமன்றி அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை, நிதி நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தாளாளரின் வீடு, திருச்சியில் உள்ள அவரது மகன் மற்றும் மகள் வீடுகளிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை சிக்கியுள்ள ஆவணங்களை வைத்து அவர்களிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பட்டு வருவதாகவும், இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications