ராம மோகன் ராவின் உதவியாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ராம மோகன் ராவின் அறையில் நடந்த சோதனையை தொடர்ந்து அவரது உதவியாளர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும்.
சேகர் ரெட்டி அளித்த தகவலின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன், உறவினர் வீடுகள் உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். துணை ராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் அலுவலகத்திலிருந்த கம்ப்யூட்டர் மற்றும் தலைமைச் செயலரின் லேப்டாப்களை பலமணி நேரம் ஆய்வு செய்தனர். பாஸ்வேர்டு தெரியாமல் போகவே, திணறிய அதிகாரிகள் ராம மோகன் ராவிடம் பாஸ் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னுடைய பர்சனல் என்று கூறினாராம். ரெய்டு வந்த பிறகு பர்சனல் என்று எதுவும் கிடையாது என்று சொல்லவே, பாஸ்வேர்டை கூறினாராம். இதனையடுத்து லேப் டாப்பில் இருந்த இ மெயில், பதிவுகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் தங்கள் ஹார்டு டிஸ்க்கில் பதிவேற்றிக்கொண்டனர்.
ராம மோகன் ராவ் பயன்படுத்திய செல்போன், டெப்லெட் உள்பட பல சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாலை ஐந்துமணி வரை இந்த அதிரடிச் சோதனை நடந்தது. தமிழக தலைமைச் செயலகப் பணிகள் முழுவதும் இதனால் முற்றிலும் முடங்கி விட்டன
தலைமை செயலகத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்கள் சேகர், குமார் ஆகிய இருவரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், தமிழக அரசியல்வாதிகள் மற்றும் பல அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சேகர் ரெட்டியின் வழக்கைப்போல் இவரது வழக்கும் சிபிஐக்கு மாற வாய்ப்புள்ளது. அப்போது, பலரது தலை நிச்சயம் உருளப்போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications