மிகவும் பிரசித்தி பெற்ற செங்கோட்டை பரோட்டா கடை, வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை
செங்கோட்டை பார்டரில் உள்ள பரோட்டா கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள பிரபல பரோட்டா கடையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிரானூர் பார்டரில் பிரபலமான பரோட்டா கடை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

எந்நேரமும் இந்த கடையில் மக்கள் மொய்த்து கொண்டிருப்பர். குற்றாலம், தென்காசி செல்லும் சுற்றுலா பயணிகளும், மக்களும் இங்கு பரோட்டாவை ருசிப்பது வழக்கம்.
அத்தகைய பிரபலமான கடையிலும், கடை உரிமையாளருக்கு சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.












Click it and Unblock the Notifications