புதுவை பண்ணை வீட்டில் என்ன இருக்கும்? சாணி தான் இருக்கும்- ரெய்டு குறித்து தினகரன் நக்கல்

Subscribe to Oneindia Tamil
ஐடி ரெய்டு, டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?- வீடியோ

சென்னை : இன்று காலை முதல் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகளில் பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா மற்றும் தினகரனின் மன்னார்குடி உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். திவாகரன், இளவரசி, விவேக், டாக்டர் வெங்கடேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வீடுகளிலும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், தினகரன் பண்ணை வீடு, மிடாஸ் ஆலை அலுவலகங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.

IT Raid in TTV Dinakaran's farm House in Pondicherry

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தினகரன். அப்போது, தனது வீட்டில் ரெய்டு எதுவும் நடக்கவில்லை என்றும், இது எல்லாம் பழி வாங்கும் நோக்கத்தில் நடக்கும் ரெய்டு என்றும் அவர் தெரிவித்தார். பாண்டிச்சேரி பண்ணை வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தினகரன், பண்ணை வீட்டில் என்ன தான் இருக்கும்; சாணி தான் இருக்கும் என்று நக்கலாக பதிலளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT Raid in TTV Dinakaran's farm House in Pondicherry. Dinakaran meets the Press and says that there is no Raid in His home.
Please Wait while comments are loading...