மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது: அன்புமணி ராமதாஸ் திடீர் பாராட்டு
சேலம்: மத்தியில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே போயஸ் இல்லத்தில் ரெய்டுகளை நடத்தியிருந்தால் முழுமையான விவரங்களை கைப்பற்றியிருக்கலாம்.

சசிகலாவும் அவரது உறவினர்களும் ஊழல் செய்து சொத்து சேர்க்க ஜெயலலிதாதான் காரணம். தமிழக அதிமுக அரசில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
ஜெயலலிதா வீட்டில் சோதனை நடப்பது ஒன்றும் புதிது கிடையாது என்பதால் அதில் அதிர்ச்சியடைய தேவையில்லை. மத்தியில் பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, தமிழகத்தில் ஊழல் நடப்பதை மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது.
ஊழலை ஒழித்தெடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications