ஆர்.கே. நகர் பணமழையில் இவர்களுக்கெல்லாம் தொடர்பா? துணைவேந்தர், முன்னாள் எம்பி வீடுகளில் ஐடி ரெய்டு
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்எல்ஏ விடுதிகளில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து சென்னையில் 20 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்எல்ஏ விடுதிகளில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியுள்ளது. இன்று அதிகாலை தொடங்கிய சோதனை விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் பெசண்ட் நகர், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ரெய்டு நடப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரனின் வீடு மற்றும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications