இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்குத்தான் இமாலய தோல்வி.. விளாசும் ஸ்டாலின்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்குதான் இமாலய தோல்வி கிடைத்திருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்குதான் இமாலய தோல்வி கிடைத்திருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தின் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஆர்கே நகரில் பெற்ற தோல்வி திமுகவுக்கானது அல்ல; தேர்தல் ஆணையத்தின் இமாலய தோல்வி என ஸ்டாலின் தெரிவித்தள்ளார். ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும், ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணம் வாரிவாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது தேர்தல் ஆணையம் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications