திருச்சியில் வரலாறு காணாத வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் மக்கள் தவிப்பு!
சென்னை: தமிழகத்திலேயே அதிக அளவாக இன்று திருச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்தது. இதன் காரணமாக திருச்சியில் இன்று பகல் நேரத்தில் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.
தமிழகத்தில் 10 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடிக்கிறது. சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் கடுமையாக இருக்கிறது.
காலையில் தொடங்கும் கடும் வெயில் மாலை வரை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெளியில் தலை காட்டவே அஞ்சும் நிலை உள்ளது.
வேலூரில்தான் தற்போது அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேலூரையும் தாண்டி திருச்சியில் அதிக அளவில் வெப்ப நிலை பதிவானது. அங்கு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் இன்று வெளுத்தது. இதனால் மக்கள் பெரும் தவி்புக்குள்ளானார்கள். வெளியில் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. கடும் அனல் காற்றும் வீசியது.
இதேபோல வேலூர், சேலம், மதுரை, சென்னையிலும் இன்று வெயில் வெளுத்தது.
சென்னையி்ல் இன்று 100 டிகிரிக்குள்தான் வெயில் இருந்தாலும் கூட 100 டிகிரிக்கு மேல் வெயில் இருப்பது போலவே ஒரு பீலிங்.
இன்று தமிழகத்தில் 10 நகரங்களுக்கு மேல் 100 டிகிரியைத் தாண்டியது வெயில். பல நகரங்களில் அனல் காற்றும் வீசியதால் மக்கள் தவிப்புக்குள்ளனார்கள்.
முக்கிய நகரங்களில் இன்றைய வெயில் நிலவரம்:
திருச்சி - 106
சேலம் -103
திருச்செங்கோடு - 103
திருப்பூர் - 102
மதுரை - 100
சென்னை - 97
நெல்லை - 97
கோவை - 97
வேலூர் - 97
கொடைக்கானல் - 82
ஊட்டி - 75
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications