2 தொகுதிகள் கேட்ட இந்திய தேசிய முஸ்லிம் லீக்- வேலூரை மட்டும் கொடுக்கும் திமுக!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளைக் கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடிப் பார்த்தது. ஆனால் கடைசியில் நெல்லை தொகுதியை மட்டும் முஸ்லிம் லீக்கிடம் கொடுக்க முன்வந்து இருக்கிறது திமுக.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர்.

அத்துடன் மயிலாடுதுறை, திருநெல்வேலி அல்லது திருச்சியையும் கேட்டது முஸ்லிம் லீக். பெரிய கூட்டணிக் கட்சிகள் இல்லாத நிலையில் 2 தொகுதிகள் அவசியம் என்று முஸ்லிம் லீக் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும். மேலும் 2 முறை வேலூர் தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தை எடுத்துக் கொள்ளுமாறு திமுக கூறியது.
ஆனால் முஸ்லிம் லீக் இதை ஏற்கவில்லை. அத்துடன் திருச்சியை முஸ்லிம் லீக் கேட்டது. இப்போதுதான் மாநாடு நடத்தி திராணி காட்டியிருப்பதால் இந்த கோரிக்கையையும் திமுக நிராகரித்தது. இதனால் திண்டுக்கல் தொகுதியை எடுத்துக் கொள்ளுமாறு திமுக சொன்னது.
இதேபோல் மயிலாடுதுறையை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதால் அதையும் தர முடியாது என்று திமுக மறுத்துவிட்டது.
வேலூரை துரைமுருகன் தனது மகனுக்காக ஒதுக்க நினைப்பதால் அதைத் தருவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், வேலூரை எப்படியும் வாங்கிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதனால் துரைமுருகன் மகனுக்கு அரக்கோணத்தை ஒதுக்கிவிட்டு வேலூரை முஸ்லீம் லீக்குக்கு கருணாநிதி ஒதுக்கிவிடுவார் என்றே தெரிகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications