அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை- ஜெ.அன்பழகன் விளக்கம்
அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என்று ஜெ. அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என்றும் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்றும் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது ஆதங்கத்தை என் அப்பாவிடம் வெளிப்படுத்த வந்துள்ளேன்.

கட்சியில் எனக்குத்தான் நிறைய ஆதரவாளர்கள் உள்ளனர். இப்போது எதையும் கூறமுடியாது. காலம் பதில் சொல்லும் என்று கூறி ஒரு குண்டை போட்டார் அழகிரி. இதை கூறிவிட்டு நேராக கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் அழகிரி.
அங்கு அவர் கூறுகையில் கட்சி ரீதியிலான எனது ஆதங்கத்தை இன்னும் 3 நாட்களில் தெரிவிப்பேன் என்றார். நாளை திமுக அவசர செயற்குழு கூடவுள்ள நிலையில் அழகிரி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது குறித்து ஜெ.அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில் திமுகவினர் கட்டுகோப்பாக உள்ளோம். அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பில் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி இறப்பிலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை.
அழகிரி கட்சியில் இல்லாதது கருணாநிதி எடுத்த முடிவு. இப்போது இருப்பவர்கள் அல்ல. அழகிரி கட்சியில் இல்லாத போது அவரது கருத்துக்கு நான் எதையும் கூறமுடியாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications