நீதிமன்றம் சென்றும் நீதி மறுப்பிற்கு பலியானவள்தான் இந்த அப்பாவி அனிதா... ஜெ.தீபா கருத்து
நீதி மறுக்கப்பட்டதால் அனிதா பலியாகிவிட்டார் என்று தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதிமன்றத்தின் கதவை தட்டியும் நீதி மறுக்கப்பட்டதால் பலியாகிவிட்டாள் அனிதா என்று ஜெ.தீபா தெரிவித்தார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜெ.தீபா தனது பேஸ்புக்கில் குறிப்பிடுகையில், யாரையும் நம்பாமல், சொந்த செலவில் நீதி மன்றங்களின் கதவுகளைத் தட்டினாள் அந்த ஏழைச்சிறுமி.. உதவிக்கு யாரும் இல்லை..., செவி மடுக்க அரசும் தயாராக இல்லை, நியாயத்தை நீதிமன்றமும் கேட்கவில்லை..
மத்திய அரசின், மாநில அரசின் சப்பைக்கட்டு கட்டும் வாதங்களை கேட்டு, மனசாட்சியை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வெறுமனே கூறப்படும் தீர்ப்புக்கள், சட்டப்படியாக மட்டுமே இருக்கிறதே தவிர நியாயப்படி, தர்மப்படி இருக்கிறதா ?! இல்லவே இல்லை...
அப்படிப்பட்ட நீதி மறுப்பிற்கு பலியானவள் தான், அப்பாவி சிறுமி அரியலூர் அனிதா என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications