ஜெ.வுக்கு பிறகு மற்றொரு சகாப்தமும் முடிந்துவிட்டதே.. ஜெ.தீபா வேதனை
ஜெயலலிதாவுக்கு பிறகான மற்றொரு சகாப்தமான கருணாநிதி மறைந்துவிட்டார்.
சென்னை: கருணாநிதியின் மறைவுக்கு ஜெ.தீபா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் அம்மாவுக்கு பிறகான மற்றொரு சாகப்தம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு நிகழ்ந்துள்ளது. தமிழக அரசியலில் மாபெரும் புகழ்மிக்க தலைவர்களாக இருவரையும் உணர்கிறேன். திரு.கருணாநிதி அவர்கள் தனது இளம்பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர்.

அவரது இலக்கிய பங்களிப்புகளும், தமிழ் இலக்கியத்தின் கண் அறிவார்ந்த பாடல்ககள், மேலும் தமிழ் திரைப்படங்களில் ஓர் திரைக்கதை எழுத்தாளர் போன்ற படைப்புகள் அனைத்தும் தொன்மைமிக்க பாரம்பரியத்தை நினைவூட்டுகின்றன.
சிவாஜி நடிப்பில் வெளிவந்த பராசக்தி மற்றும் நவீன சினிமாவின் பாலைவன ரோஜாக்கள் ஆகிய படங்களுக்கு அவரே திரைக்கதைகளையும் உரையாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் தனது நெருங்கிய நண்பரான டாக்டர். எம்.ஜி.ராமசந்திரன் அவர்களோடு இணைந்து திரைக்கதைகள் எழுதியுள்ளார்.
அரசியலையும் தாண்டி திரு.கருணாநிதியும் எம்.ஜி.ஆர்-ரும் நெருங்கிய நட்பு பாராட்டியார்கள். அதேபோல எனது அத்தையும் மறைந்த தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்களுடன் திரைத்துறையில் பயணித்து, பின்னாளில் அரசியல் போட்டியாளராகவும் திரு.கருணாநிதி உருவெடுத்தார். இவ்விருவரும் பல ஆண்டுகள் அரசியல் வானில் சமமாக பயணித்தவர்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக திமுக என்னும் கட்சிக்கு தலைவராக இருந்தது மட்டுமின்றி அனைவரையும் கவரும் வகையில் பயணித்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று.
ஓர் தலை சிறந்த நபரை நான் இழந்துவிட்டேன். திரு.கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஜெ.தீபா தெரிவித்துள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications