பிப். 24 ஜெ பிறந்த நாளில் தீபா கட்சி உதயமாகிறது.. தவிப்பில் மன்னார்குடி கோஷ்டி.. தடுக்க துடிப்பு!
ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24-ல் புதிய கட்சியை தொடங்குகிறார் தீபா. இதை தடுப்பதில் மன்னார்குடி கோஷ்டி மும்முரமாக உள்ளதாம்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தம்முடைய புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் ஜெ. தீபா. அதேநேரத்தில் புதிய கட்சியை தொடங்க விடாமல் தீபாவை தடுப்பதற்கான முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளதாம் மன்னார்குடி கோஷ்டி.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் அக்கட்சியை கைப்பற்றிவிட்டார் சசிகலா. ஆனால் அதிமுக தொண்டர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
சசிகலாவை ஏற்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை புதிய தலைவராக முன்னிறுத்துகிறார்கள். நாள்தோறும் தீபாவின் தி.நகர் வீட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தீபாவுக்கு ஆதரவு
அதிமுகவின் தலைமையை தீபாதான் ஏற்க வேண்டும் என்றும் சசிகலாவை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தீபாதான் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

யாரும் தடுக்க முடியாது
அந்த தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக, பொறுமையாக இருங்கள்; நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என ஆறுதலாக பேசிவருகிறார் தீபா. தொண்டர்களின் தன்னெழுச்சி ஒரு பேரியக்கமாக மாறும் வகையில் பொறுத்திருப்போம் என்பதுதான் தீபாவின் ப்ளானாம்.

பேரியக்கமாக...
இந்த தன்னெழுச்சி ஒரு மாபெரும் பேரியக்கமாக நிச்சயம் உருவெடுக்கும்; அதுவரை தனிக்கட்சிக்கான வியூகங்கள், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறாராம் தீபா.

புதிய கட்சி
பிப்ரவரி 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா, அதே நாளில் புதிய கட்சியை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய நாளில் சசிகலாவுக்கு எதிரான அதிமுக தலைவர்கள் தீபாவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முட்டுக்கட்டை...
தற்போது தீபாவின் புதிய கட்சி தொடங்கும் முயற்சியை தடுப்பதில் மன்னார்குடி கோஷ்டி படுதீவிரமாக இருந்து வருகிறது. தீபாவுடனான சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த போராடிக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications