வெளியே தொண்டர்கள் கூப்பாடு... வீட்டுக்குள்ளே குதித்து குதித்து ஆடிய தீபா & கோ!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு நான்கைந்து 'பீட்'கள் அதிகரித்துவிட்டன.

ஒரு பக்கம், போயஸ் கார்டன், அந்தப் பக்கம், ஓபிஎஸ் கேம்ப், கொஞ்ச நாள் கூவத்தூரில் டேரா, தினந்தோறும் மாலை வேளையில் அம்மா சமாதி தியானங்கள்...

இன்னொரு பக்கம் ஆதரவாளர்கள் என்ற பெயரில் தீபா வீட்டுப்பக்கம் நடக்கும் கூத்துகள்.

J Deepa's dance at her residence

தினந்தோறும் காலையிலேயே வந்துவிடுகிறார்கள் தொண்டர்கள். இவர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களுக்கெல்லாம் வேறு வேலை வெட்டியே இல்லையா... சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறார்கள்.. குடும்பம் என்று ஏதாவது இருக்கிறதா... இந்தக் கேள்விகள் உறுத்திக் கொண்டே இருக்கும்.

ஒரு ஆள் தினந்தோறும் ஒரு சின்னப் பெண்ணை தூக்கிக் கொண்டு வருகிறார். பிற்பகல் தாண்டியதும் அந்தப் பெண்ணுக்கு அப்படியே தீபா மேக்கப் கெட்டப்பைப் (கருமம்டா..) கூட்டத்துக்கு முன் உட்கார வைத்துவிடுகிறார்.

கடந்த வாரத்தில் ஒருநாள், ஒரு செய்தியாளரும் புகைப்படக்காரரும் தீபா வீட்டு கூத்துக்களைப் பதிவு செய்யக் கிளம்பினர்.

அங்கே போய் பிற்பகல் வரை காத்திருந்தனர். வெளியில் நிற்கும் தீபா பேரவையினர் தீபாம்மா.. தீபாம்மா என கத்திக் கொண்டே இருந்தனர். அவரோ வெளியில் எட்டிப் பார்க்கும் ஐடியாவே இல்லாதவர் மாதிரி கமுக்கமாக உள்ளேயே இருந்தார்.

அரை நாள் கடந்துவிட்டது.

மீண்டும் 'தீபாம்மா... தீபாம்மா... வெளில வந்து தலையையாவது காட்டும்மா..' என்று கத்தினான் ஒரு இளைஞன் (எந்த வயசுல என்ன வேல பாக்குது பாரு...).

செய்தியாளரும் புகைப்படக்காரரும் மெள்ள உள்ளே எட்டிப் பார்த்தனர். திறந்திருந்த ஒரு அறையில் தீபா குதித்து குதித்து ஆடிக் கொண்டிருந்தார். உடன் அவரது கணவர் மாதவனும் குத்தாட்டம் போட, அவர்களது டிரைவரும் அதில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்.

என்ன நடக்கிறது எனபதை உணரவே சில நொடிகளாகிவிட்டதாம் செய்தியாளருக்கும் கேமராமேனுக்கும். 'தம்பி, இதை போட்டோ எடுப்பா' என புகைப்படக்காரரிடம் சொன்னால், அவர் அதிர்ச்சியில் உறைந்து போய், கேமராவை திறக்க மறந்துவிட்டாராம். இந்த சம்பவத்தை அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே பகிர்ந்து கொண்டார் செய்தியாளர்.

என்ன வினோதமான அரசியல்வாதிகள் இந்த ஜெ தீபா அன்ட் கோ!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A reporter and photographer were witnessed for J Deepa's Kuththu dance at her residence, when her party members waiting for her dharshan for hours.
Please Wait while comments are loading...