அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஜெ. தீபா கணவர் மாதவனால் பரபரப்பு!
முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: ஓராண்டு நிறையு செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ. தீபாவின் கணவர் மாதவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தினசரி நாளிதழ்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓராண்டின் சாதனைகள் என்று துறை வாரியாக செய்யப்பட்டுள்ள விஷயங்கள் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிசாமி ஓராண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு கட்சியினர் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் இன்று திடீரென ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
முதல்வர் பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஜெ. தீபா. கணவர் ஒரு கட்சி மனைவி ஒரு கட்சி என்று தீபாவும், மாதவனும் தனித் தனி கட்சியை நடத்தி வருகின்றனர்.
தீபா, மாதவன் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டும் வருகின்றன. இந்நிலையில் திடீர் திருப்பமாக மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க மாதவன் வந்ததாக தெரிகிறது.
மாதவனை தடுத்து நிறுத்திய போலீசார் முதல்வரை சந்திக்க முன் அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். முன் அனுமதி வாங்கினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்றும் மாதவனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மாதவன் சிறிது நேரம் அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலேயே காத்திருந்தார்.
மாதவன் வந்திருக்கும் தகவல் கட்சி அலுவலகத்திற்குள் இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாதவனை உள்ளே பாதுகாப்பாக அழைத்து வருமாறு அவர்கள் உத்தரவிட்டதையடுத்து மாதவன் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அவர் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சென்றார்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications