நான் தாக்கல் செய்த ஆவணங்களை மாற்றி வைத்து சதி.. வேட்புமனு தள்ளுபடி பற்றி தீபா திடுக் புகார்
தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து தீபா புகார் அளித்தார்.
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் எதையும் பூர்த்தி செய்யாமல் விடவில்லை என்று ஜெ.தீபா தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்புமனுவில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாத காரணத்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்தார்.
இந்நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தீபா புகார் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், எனது வேட்புமனுவில் நான் சில படிவங்களையும், கட்டங்களையும் பூர்த்தி செய்யவில்லை என்று கூறினர். அந்த படிவத்தை காண்பியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆரம்பத்தில் அசல் வேட்புமனுவை காண்பிக்க முடியாது என்று சொன்னார்கள்.

விண்ணப்பமே இல்லை
நான் வலியுறுத்தி கேட்டவுடன் அவர்கள் காண்பித்தனர். அதை பார்த்தவுடன் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அது நான் கொடுத்த விண்ணப்பமே இல்லை. அவர்கள் நிராகரிக்க காரணமாக சொல்லும் படிவம் 26-இல் நான் எழுத்து திருத்தங்களுடன் பூர்த்தி செய்து அதை சமர்ப்பித்திருந்தேன்.

2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன
ஆனால் அசல் வேட்புமனுவை வாங்கி பார்த்தபோது அவை நான் சமர்ப்பித்த படிவங்கள் இல்லை. சொத்து மதிப்புகளை குறிப்பிடாமல் ஒரு படிவமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அது என்னோடது கிடையாது. அதில் 2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. எனது வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது அதில் முறைகேடு நடந்துள்ளது.

மிரட்டல்கள்
வேட்புமனுவில் நான் எதையும் பூர்த்தி செய்யாமல் இருக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் கொடுத்துள்ளேன். வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது கூட சிலர் என்னை காரை விட்டு இறங்கினால் தாக்குதல் நடத்துவோம் என்றனர்.

எனக்கு அதிகாரிகள் உதவி
வேட்புமனுக்களையே மாற்றும் அளவுக்கு முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. விசாரணை நடத்தினால் மட்டுமே எனக்கு நியாயம் கிடைக்கும் என்பதால் நான் இங்கு புகார் கொடுத்துள்ளேன். கடந்த முறை நான் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் எனக்கு பூர்த்தி செய்வதில் உதவினர்.

தேர்தலை எதற்கு நடத்த வேண்டும்
ஆனால் இந்த முறை ஆரம்பம் முதலே என்னை தேர்தல் அலுவலகத்துக்கு வரவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். நான் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்பதிலேயே தீவிரம் காட்டினர். ஆவணங்கள் மாறியிருப்பதில் எனக்கு அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முறைகேடு செய்வதற்கு தேர்தலை நடத்தாமலேயே இருக்கலாமே.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications