ஜாக்கி சான் சட்டையில் "கபாலி".. அடங்காமல் வாலாட்டும் போட்டோஷாப் புலிகள்!
சென்னை: ரஜினியின் கபாலி பட போஸ்டர் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டீசர்ட்டை அணிந்து ஜாக்கிசான் போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆனால் உண்மையில் அது டுபாக்கூர் படம் பாஸ். அந்த வெள்ளை டீசர்ட்டைப் போட்டு, ஏன் தான் அப்படி போஸ் கொடுத்தோமோ என ஜாக்கிசானே பீல் செய்யும் அளவிற்கு நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள்.
ஜாக்கிசான் வெள்ளை நிற அணிந்து, தன் நெஞ்சுப்பகுதியை ஆள்காட்டி விரலால் குறிப்பது போன்ற புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

போட்டோஷாப்...
ஆனால், அந்தப் புகைப்படத்தில் ஜாக்கிசான் விரலால் சுட்டிக் காட்டும் இடத்தில் நெட்டிசன்கள் தங்கள் இஷ்டப்படி புகைப்படங்களை போட்டோஷாப் மூலம் அச்சிட்டு கொண்டாடி வருகின்றனர்.

விதவிதமான படங்கள்...
இணையத்தில் தேடினால், ஜாக்கிசானின் வெள்ளை டீசர்ட்டில் அத்தனை உருவங்கள் அச்சிடப்பட்ட விதவிதமான டீசர்கள் அணிவகுக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

கபாலிடா...
இந்நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ரஜினியின் கபாலி போஸ்டரையும் சேர்த்து விட்டுள்ளனர். இது யார் செய்த வேலை எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அவர் ரஜினியின் தீவிர ரசிகராகத் தான் இருக்க வேண்டும்.

ரஜினி ரசிகர்...
ஜாக்கியின் வெள்ளை நிற டீசர்ட்டில் ரஜினியின் கபாலி படத்தை போட்டோஷாப் முறையில் ஒட்ட வைத்து, பின்னணியிலும் போஸ்டர்களை வரிசை கட்ட வைத்துள்ளனர். கூடவே இந்தப் படத்தை இணையத்தில் பரப்பி, ‘ஜாக்கிசானும் ரஜினியின் ரசிகராகி விட்டதாக' புகழ் பாடி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு...
ஏற்கனவே, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் இது போன்ற புகைப்படங்கள் கபாலி மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

பில்லா 2...
முன்னதாக அஜித்தின் பில்லா 2 படம் வெளியானபோது, இதேபோல் ஜாக்கியின் டீ சர்ட்டியிலும், பின்புறம் சுவற்றிலும் அப்படத்தின் போஸ்டரை ஒட்டவைத்து நெட்டிசன்கள் அழகு பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications