Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று ஜாக்டோ சங்க ஆசிரியர்கள் ஸ்டிரைக்: பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் இன்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இன்று பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

JACTO strike: Schools to function as usual

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும், ஜாக்டோ சங்கத்தை தவிர பிற சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பிற கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டம் என்று அறிவித்து இருப்பதால் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று( வியாழக்கிழமை) எவ்வித தடங்கலுமின்றி செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஒரு சில சங்கங்கள் மட்டுமே கலந்துகொள்வதால், பள்ளிகளுக்கு வருகை தரும் பிற சங்கங்களைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தித் தர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அப்பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடிப் பணியாளர் ஆகியோரைப் பயன்படுத்தி பள்ளிகள் செயல்படுவதை உறுதிப்படுத்திட வேண்டும். கல்வித்துறையைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டுஅனைத்துப் பள்ளிகளும் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருப்பின், பள்ளியின் வகுப்பறை சாவிகளை புதன்கிழமையே சத்துணவு அமைப்பாளர்/ அங்கன்வாடிப் பணியாளரிடம் ஒப்படைத்து பள்ளி நடைபெறுவதை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+