பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்? தமிழிசை சொல்வதை கேளுங்கள்
திருப்பூர்: விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தொடர்பாக மாவட்டவாரியாக தமிழிசை ஆய்வு நடத்தி வருகிறார். இன்று திருப்பூர் வந்த தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

2016ல் தமிழகத்தில் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைப்போம். விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்துப் பேசியது அரசியல் கூட்டணிக்காக அல்ல, இந்த சந்திப்பு மக்கள் நலன் சார்ந்தது. ஆட்சி வேறு, கட்சி வேறு. இவ்வாறு தமிழிசை கூறினார்.
தன்னை பாஜக தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை என்று விஜயகாந்த் குறைபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழிசை இவ்வாறு நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளது சில ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் இரு தினங்கள் முன்பு சந்தித்துப் பேசினர்.
அப்போது, பாஜக கூட்டணியின் முதல்வர் பதவி வேட்பாளராக விஜயகாந்த்தை முன்னிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திமுக கூட்டணிக்கோ, மக்கள் நல கூட்டணிக்கோ விஜயகாந்த் சென்றுவிட கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கையை பாஜக கையிலெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்பேரிலேயே தமிழிசை இன்று தன்னம்பிக்கையோடு பேட்டியளித்திருப்பதாக தெரிகிறது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications