முதல் முறையாக கோவையில் ஜல்லிக்கட்டு - உற்சாகமாக களமாடிய மாடுபிடிவீரர்கள்!
முதல் முறையாக கோவையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்..
கோவை: கோவையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வீரத்தை வெளிப்படுத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை அவணியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கோவையில் இதுவரை நடைபெற்றதில்லை.

இந்நிலையில் கோவையில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் மற்றும், 'ஓம்கார் பவுண்டேஷன்' சார்பில் இன்று, நீலம்பூர் - மதுக்கரை பை-பாஸ் ரோட்டில், வெள்ளலுார் பிரிவு அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக 30 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து, 600 அடி தொலைவுக்கு இருபுறமும் பார்வையாளர்கள், 20 ஆயிரம் பேர் அமருவதற்காக, கேலரி அமைக்கப்பட்டது. இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும், இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளாக, கார், பைக் மற்றும் மொபெட் வழங்கப்பட்டன.
பார்வையாளர்களுக்காக உணவகம், கழிவறை, பார்க்கிங், மருத்துவ வசதிகளும் செய்யப்ப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications